search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு மே மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு- அதிகாரிகள் தகவல்

    தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டருக்கு கிருஷ்ணா நதி கால்வாயில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

    அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த மாதம் 6-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 21-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 6-ந் தேதி வரை சாதனை அளவாக 8.060 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது.

    இதனிடையே தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டருக்கு கிருஷ்ணா நதி கால்வாயில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்த பணிகள் அடுத்த மாதம் கடைசியில் முடிவடைய வாய்ப்பு உள்ளது. இதனால் மே மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    3.233 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2.121 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 183 கன அடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    Next Story
    ×