search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன சோதனை
    X
    வாகன சோதனை

    நாமக்கல் அருகே வாகன சோதனையில் ரூ.5.52 லட்சம் பறிமுதல்

    நாமக்கல் அருகே வாகன சோதனையில் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 964 பறிமுதல் செய்யப்பட்டது.
    நாமக்கல்:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுவினர் மூலம் வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து வந்த முட்டை லாரியை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரவிக்குமார் என்பவரிடம் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 964 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் நாமக்கல் சட்டசபை தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தமிழ்மணியிடம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் வைக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு உரியவரிடம் அந்த பணம் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×