என் மலர்

  செய்திகள்

  கொலை
  X
  கொலை

  தேனி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண்ணை வெட்டி கொன்ற வாலிபர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண்ணை வெட்டி கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டுகாளாக சாக்குமூடையில் வைத்து புதருக்குள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தமபாளையம்:

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகள் கலைச்செல்வி(22). இவருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் தனியார் நிறுவனத்தில் நிலஅளவையாராக பணிபுரிந்து வரும் காசிராஜன்(28) என்பவருக்கும், கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சரண்சர்மா என்ற ஒன்றரை வயது கைக்குழந்தை உள்ளது.

  இந்நிலையில் கடந்த 9.9.2020-ந்தேதி கலைச்செல்வி தனது தந்தை வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து தனது குழந்தையுடன் வெளியே சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கருப்பையா உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

  மேலும் மாவட்ட எஸ்.பியிடமும் புகார் அளித்தார். எஸ்.பி சாய்சரண்தேஜஸ்வி உத்தரவின்பேரில் உத்தமபாளையம் டி.எஸ்.பி சின்னக்கண்ணு மேற்பார்வையில் தனிப்படை இன்ஸ்பெக்டர் பாஸ்டின்பிரபாகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

  கலைச்செல்வி கடைசியாக தனது செல்போனில் யார் யாரிடம் பேசினார் என்று விசாரணை நடத்தியதில் சின்னமனூரை சேர்ந்த சிலம்பரசகண்ணன்(32) என்பவருடன் அதிக நேரம் பேசியது தெரியவந்தது.

  போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார். இருந்தபோதும் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது,

  கலைச்செல்வி தன் கல்லூரியில் படித்து வந்தபோது சிலம்பரசகண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

  இறைச்சி கடை மற்றும் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விபரம் கலைச்செல்வியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்து காசிராஜனுக்கு கலைச்செல்வியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

  இருந்தபோதும் கலைச்செல்வி அடிக்கடி தனது காதலனுடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வியை பார்க்க விரும்புவதாக சிலம்பரசகண்ணன் தெரிவிக்கவே கணவரிடம் ஏதோ சாக்குசொல்லிவிட்டு தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். கைக்குழந்தையுடன் வந்த கலைச்செல்வியை சின்னமனூர் அருகில் உள்ள கருங்கட்டான்குளம் என்ற பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

  அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலம்பரசகண்ணன் தனது நண்பர் ராஜேசை அங்கு வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து கலைச்செல்வி மற்றும் அவரது கைக்குழந்தையை வெட்டி கொன்றனர். பின்னர் உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக்கி சாக்குமூடையில் வைத்து அங்குள்ள புதரில் வீசிச்சென்றுள்ளனர். போலீசாருக்கு சந்தேகம் வராதபடி எப்போதும்போல் இருந்து வந்துள்ளனர். இருந்தபோதும் கலைச்செல்வி கடைசியாக செல்போனில் பேசிய உரையாடல் மூலம் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கைக்குழந்தையுடன் இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×