search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    பிலிப்பைன்ஸ் என்ஜினீயருக்கு கொரோனா- தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த 28 மாலுமிகளுக்கு பரிசோதனை

    பிலிப்பைன்ஸ் என்ஜினீயருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த 28 மாலுமிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த ஆண்டு தொடக்கில் இருந்து தினசரி தொற்று ஒற்றை இலக்கத்திற்கு சென்றது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வீச தொடங்கியதால் தூத்துக்குடி மாவட்டத்திலும் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு எம்.எஸ்.சி. மிலா3 என்ற கப்பல் 29 மாலுமிகளுடன் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு வந்தது. அந்த கப்பலில் என்ஜினீயராக பணியாற்றி வந்த பிலிப்பைஸ் நாட்டை சேர்ந்த ஹான்பில்லா அன்டணி ஒபிரியானோ (வயது 44) என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனை தொடர்ந்து அவருடன் வந்த மற்ற 28 மாலுமிகளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் மற்ற மாலுமி களுடன் கப்பல் வழக்கம் போல இன்று புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×