search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு சவரன் ரூ.33,728-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த மூன்று நாட்களாக உயர்வு காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 840 ஆக இருந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.33 ஆயிரத்து 728-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 216 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் உயர்வு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.69 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்கிறது.
    Next Story
    ×