search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள்

    சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே முன்பதிவு சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-ஹஸரத் நிசாமுதீன் (வண்டி எண்: 06151) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 6.05 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக ஹஸரத் நிசாமுதீன்-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (06152) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் திங்கட்கிழமைகளில் மதியம் 3.35 மணிக்கு ஹஸரத் நிசாமுதீனில் இருந்து இயக்கப்படும்.

    * எம்.ஜி.ஆர். சென்ட்ரல்- கோவை (06029) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் காலை 7.10 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (06030) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து இயக்கப்படும்.

    * மதுரை-ஹஸரத் நிசாமுதீன் (06155) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரையில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக ஹஸரத் நிசாமுதீன்- மதுரை (06156) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 22-ந்தேதி முதல் செவ்வாய், வியாழக்கிழமைகளில் அதிகாலை 5.20 மணிக்கு ஹஸரத் நிசாமுதீனில் இருந்து புறப்படும்.

    * மதுரை-சென்னை எழும்பூர் (06158) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 17-ந்தேதி முதல் வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-மதுரை (06157) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்.

    * கோவை-எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (02682) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-கோவை (02681) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 17-ந்தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * புதுச்சேரி-மங்களூரு (06855) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் வியாழக்கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக மங்களூரு-புதுச்சேரி (06856) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.35 மணிக்கு மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * புதுச்சேரி-கன்னியாகுமரி (06861) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 11-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கன்னியாகுமரி-புதுச்சேரி (06862) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் திங்கட்கிழமைகளில் மதியம் 1.50 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * தாம்பரம்-நாகர்கோவில் (06191) இடையே இயக்கப்படும் அந்தியோதயா தினசரி சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும். மறுமார்கமாக நாகர்கோவில்-தாம்பரம் (06192) இடையே இயக்கப்படும் அந்தியோதயா தினசரி சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி முதல் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×