என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 482-ஆக உள்ளது.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தொற்று அதிகமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 976-ஆக உள்ளது. இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 34 பேர் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 482-ஆக உள்ளது. இதுபோல் 270 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலன் இன்றி 224 பேர் பலியாகியுள்ளனர்.
  Next Story
  ×