என் மலர்

  செய்திகள்

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமனம்
  X
  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமனம்

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  மதுரை:

  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

  எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப்பணிகளான சாலை, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள், 2019 ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதேபோன்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தோ்வு செய்யப்பட்ட இடத்தில், 5.5 கிலோ மீட்டருக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன

  இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த உறுப்பினர் பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களில் எம்.பி. சு.வெங்கடேசன் விலகிக்கொண்டார். இதையடுத்து தற்போது ரவீந்திரநாத் குமார் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Next Story
  ×