search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்த்தசாரதி
    X
    பார்த்தசாரதி

    விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா

    தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே சுதீஷ் மற்றும் கொள்கை பரப்பு செயலாளரும் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளருமான அழகாபுரம் மோகன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    போரூர்:

    விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க கூட்டணியின் சார்பில் தே.மு.தி.க துணை செயலாளர் பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.

    கடந்த திங்கட்கிழமை அவர் கோயம்பேடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பார்த்தசாரதி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார். இதை தொடர்ந்து அவர் நேற்று பிரசாரத்துக்கு செல்லவில்லை.

    அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பார்த்த சாரதி ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பிரசாரம் தொடங்கிய 2-வது நாளிலேயே பார்த்த சாரதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் சென்ற தே.மு.தி.க., அம.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே சுதீஷ் மற்றும் கொள்கை பரப்பு செயலாளரும் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளருமான அழகா புரம் மோகன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
    Next Story
    ×