search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    நாமக்கல்லில் அச்சக தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

    நாமக்கல்லில் அச்சக தொழிலாளர்கள் கருப்பு தினமாக அனுசரித்து கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    பேப்பர் உள்ளிட்ட அச்சக மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய மற்றும் தமிழ்நாடு அச்சக உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நாடு முழுவதும் உள்ள அச்சக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    இதையொட்டி நாமக்கல்லில் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பாலகோபால், செயலாளர் சஞ்சீவி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிலாளர்கள் கருப்பு தினமாக அனுசரித்து கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    அச்சக தொழில் சார்ந்த மூலப்பொருட்களான ஆர்ட் பேப்பர், மை, அட்டை, கெமிக்கல், லேமினேஷன், பிலிம், பாலி மாஸ்டர் போன்ற அனைத்து மூலப்பொருட்களும் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான விலையேற்றம் அடைந்து உள்ளது. அச்சக மூலப்பொருட்களின் அதீத விலை ஏற்றம் அச்சு தொழிலை மிக கடுமையாக பாதித்து உள்ளது. எனவே ஏப்ரல் மாதம் முதல் அனைத்து அச்சு வேலைகளுக்கும் 30 சதவீதம் வரையிலான விலை உயர்வை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×