search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்பு மனு பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்திரன் பலகையில் ஒட்டியபோது எடுத்தபடம்.
    X
    வேட்பு மனு பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்திரன் பலகையில் ஒட்டியபோது எடுத்தபடம்.

    திருவாரூர் மாவட்டத்தில் 65 வேட்பு மனுக்கள் ஏற்பு - 39 மனுக்கள் தள்ளுபடி

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது.
    திருவாரூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி 4 சட்டமன்ற தொகுதிகளில் 104 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 4 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

    இதில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 33 வேட்பு மனுக்களில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 30 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 23 வேட்பு மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி தொகுதியில் 22 வேட்பு மனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 11 மனுக்கள் ஏற்கப்பட்டது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 26 வேட்பு மனுக்களில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 11 வேட்பு மனுக்கல் ஏற்கப்பட்டது.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் 39 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 65 வேட்பு மனுக்கல் ஏற்கப்பட்டது.
    Next Story
    ×