search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி ரோப்கார் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புதிய பெட்டிகள்.
    X
    பழனி ரோப்கார் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புதிய பெட்டிகள்.

    பழனி முருகன் கோவிலுக்குரூ.30 லட்சத்தில் 10 புதிய ரோப்கார் பெட்டிகள்

    பழனி முருகன் கோவிலுக்கு ரூ.30 லட்சத்தில் 10 புதிய ரோப்கார் பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக திகழும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் ஆகியவற்றின் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் குழந்தைகள், முதியோர்கள் என அனைவரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது.

    இந்த ரோப்கார் நிலையம் பழனி அடிவாரம் கிழக்கு கிரிவீதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு என தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன. ரோப்காரின் இயக்கம் காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுகிறது. அவ்வாறு காற்று அதிகம் வீசும் நேரங்களில் அதன் சேவை நிறுத்தப்படும்.

    இந்நிலையில் பழனி ரோப்கார் நிலையத்தில் பயன்படுத்துவதற்காக 10 புதிய பெட்டிகள் வந்துள்ளன. கரூரில் இருந்து நேற்று முன்தினம் லாரி மூலம் கொண்டு வரப்பட்ட இந்த பெட்டிகள் அடிவாரத்தில் உள்ள ரோப்கார் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பழனி முருகன் கோவில் ரோப்காரில் பயன்படுத்துவதற்காக தற்போது ரூ.30 லட்சத்தில் 10 புதிய பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

    ரோப்காரில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய பெட்டிகள் அகற்றப்பட்டு விட்டு விரைவில் புதிய பெட்டிகள் பொருத்தப்படும். இதில் 8 பெட்டிகள் பயன்பாட்டுக்கும், 2 பெட்டிகள் கூடுதல் இருப்பாகவும் வைக்கப்படும். புது பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பின் அவை தொடர்ந்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றார்.
    Next Story
    ×