என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் விருதுநகர் அரசியல் கட்சி பிரமுகர் -டிரைவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் அரசியல் கட்சி பிரமுகர் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த சம்பவம் மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  மதுரை:

  சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை, தீவிர கண்காணிப்பு பிரிவு மற்றும் வீடியோ கண்காணிப்பு படை ஆகியவை மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

  இதன் ஒருபகுதியாக மதுரை மேற்கு தேர்தல் சிறப்பு அதிகாரி முத்துலட்சுமி தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் நேற்று நரிமேடு பெண்கள் கல்லூரி முன்பு வாகன சோதனை நடத்தினார்கள்.

  அப்போது அந்த வழியாக பிரபல அரசியல் கட்சிக்கொடியுடன் ஒரு கார் வந்தது. இதை பார்த்த அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

  கட்சி கொடியுடன் காரில் செல்வது சட்ட விரோதம் ஆகும். எனவே போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள். அதில் டிரைவர் உள்பட 2 பேர் இருந்தனர்.

  இதனை தொடர்ந்து அந்த காரில் பணம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீ சார் சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் கட்சி கொடிகள், வாள், வீச்சரிவாள் மற்றும் 5 அரிவாள்கள் போன்றவை இருந்தது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் காரில் வந்த 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

  அப்போது அவர்கள் விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தை சேர்ந்த கனிராஜ் (வயது 59) மற்றும் டிரைவர் தேவர்குளம் நல்லதம்பி மகன் கருப்பசாமி பாண்டியன் (24) என்பது தெரியவந்தது.

  கனிராஜின் மகள் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பதாகவும், அவரை பார்ப்பதற்காக 2 பேரும் மதுரை வந்துள்ளனர். கனிராஜின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்காக ஆயுதங் களை வைத்திருந்ததாக போலீசில் 2 பேரும் வாக்கு மூலம் அளித்தனர். 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  ‘விருதுநகர் அரசியல் கட்சி பிரமுகர் எதற்காக காரில் பயங்கர ஆயுதங்களுடன் மதுரைக்கு வந்தார்? அவருக்கு மதுரையில் வேறு எவருடனும் முன்விரோதம் உள்ளதா?’ என்பது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  விருதுநகர் அரசியல் கட்சி பிரமுகர் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த சம்பவம் மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×