search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.
    X
    செஞ்சி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 13, 14-ந் தேதிகளில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

    சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடத்திட உத்தரவிட்டுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர்கள் சிறப்பு சுருக்க திருத்தம்-2021 சிறப்பு முகாமில் புதியதாக இணைந்த வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் புதியதாக வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை NVSP/ VHA கொண்ட இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. ஆனால் இதில் போதுமான முன்னேற்றம் இல்லை.

    எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க செய்யும் வகையில், அவர்களுக்கு மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை வழங்க சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வருகிற 13-ந் தேதி(சனிக்கிழமை) மற்றும் 14-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்திட உத்தரவிட்டுள்ளது. எனவே புதிய வாக்காளர்கள் முகாம் நாட்களில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×