search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    சென்னையில் 1.60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

    சென்னையில் முதல் தவணை தடுப்பூசி 1 லட்சத்து 44 ஆயிரத்து 546 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணையாக 14 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், அதனை தொடர்ந்து முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்தக்கட்டமாக 60 வயதுக்கும் மேற்பட்ட முதிய வர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வரை (6-ந்தேதி) 8 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பூசி போட விருப்பம் உள்ளவர்கள் அதற்கான செயலி மூலம் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் இதுவரையில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 514 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    சென்னையில் முதல் தவணை தடுப்பூசி 1 லட்சத்து 44 ஆயிரத்து 546 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 52 ஆயிரம் சுகாதார பணியாளர்கள், 14058 முன் களப்பணியாளர்கள், 4484 காவல் துறையினருக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். 50 ஆயிரத்து 658 மூத்த குடிமக்களும், 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 17,418 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    2-வது தவணையாக 14 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுவரையில் சென்னை மாநகராட்சி நகர சுகாதார மையங்களில் 51 ஆயிரத்து 767 பேரும், நகர ஆரம்ப சுகாதார மையங்களில் 1461 பேரும், அரசு ஆஸ்பத்திரிகளில் 35 ஆயிரத்து 525 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 70 ஆயிரத்து 761 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×