search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூலி நிர்ணயம் செய்து தொழிலாளர்கள் பேனர் வைத்ததை படத்தில் காணலாம்.
    X
    கூலி நிர்ணயம் செய்து தொழிலாளர்கள் பேனர் வைத்ததை படத்தில் காணலாம்.

    8 மணி நேர வேலைக்கு கூலியை அறிவித்து பிளக்ஸ் பேனர் வைத்த தொழிலாளர்கள் - தஞ்சையில் பரபரப்பு

    தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையிலும், பலர் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகிறார்கள்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையிலும், பலர் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தஞ்சையில் ஒரு சில இடங்களில் கூடுகிறார்கள். பின்னர் அங்கிருந்து பணிக்கு செல்கிறார்கள்.

    தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே, சிவகங்கை பூங்கா பகுதி, கொடிமரத்து மூலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர்கள் கூடி அங்கிருந்து பணிக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் தொழிலாளர்கள் 2021-ம் ஆண்டிற்கு தங்களுடைய கூலி இவ்வளவு என அறிவித்து அந்த பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் கட்டி வைத்துள்ளனர்.

    வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் இது போன்ற பிளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் தஞ்சை கீழவாசல் பகுதி கட்டுமான தொழிலாளர்களின் 2021-ம் ஆண்டிற்கான 8 மணி நேர வேலைக்கான சம்பள விவரம் அதில் இடம் பெற்றுள்ளது. அதில் கொத்தனார் கூலி ரூ.800, ஆள்கூலி ரூ.600, சித்தாள் கூலி (பெண்) ரூ400, கான்கிரீட் கொத்தனார் ரூ.850, கான்கிரீட் ஆள் ரூ.650, கான்கிரீட் சித்தாள் ரூ.450 என அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இதற்கு ஆதரவு தருமாறும் அந்த பிளக்ஸ்பேனரில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் கூலியை குறித்த அறிவிப்பை பிளக்ஸ் பேனர் மூலம் தெரியப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×