search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    இது ரத்தம் சிந்தாத அரசியல் போர்... வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் பேச்சு

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சீமான் அறிவித்தார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

    அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். ஆனால் மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை. பெண்களுக்கு 50 சதவீதம் கொடுப்பது எங்கள் கடமை. 

    வரலாறு நமக்கு வழிகாட்டுகிறது, அந்த வரலாற்றை பின்பற்றி நாம் மாற்றம் செய்வோம். நாங்கள் விரும்பும் மாற்றத்தை எங்களிடம் இருந்து தொடங்குகிறோம். இது ரத்தம் சிந்தாத அரசியல் போர். 

    விவசாயிகள் வாழ்ந்தால் நாடு வாழ்ந்து விடும். விவசாயிகள் வாழவில்லை என்றால் அந்த நாடு சுடுகாடாக மாறிவிடும். படித்தவர்களும் விவசாயம் செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். நாம் தமிழர் கட்சி ஆட்சி செய்தால், இப்படியொரு ஆட்சியை நாம் பார்க்கவில்லையே என்று இந்தியா திரும்பி பார்க்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×