search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியை காயவைக்கும் பெண்கள்.
    X
    புளியை காயவைக்கும் பெண்கள்.

    நத்தம் பகுதியில் புளி விளைச்சல் அமோகம்

    தமிழகத்தில் புளி அதிகம் விளையும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். இங்கு விளையும் புளிக்கு தமிழகம் முழுவதும் மவுசு உள்ளது.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் புளி அதிகம் விளையும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். திண்டுக்கல்லில் விளையும் புளிக்கு தமிழகம் முழுவதும் மவுசு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நத்தம் தாலுகாவில் அதிக அளவில் புளிய மரங்கள் உள்ளன. 

    இந்த நிலையில் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, கணவாய்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புளி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதையடுத்து புளி பறிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த புளியை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். பின்னர் அவற்றை தொழிலாளர்கள் மூலம் காயவைக்கின்றனர். அதையடுத்து புளியில் இருந்து தோல், விதை ஆகியவற்றை தொழிலாளர்கள் நீக்கி கொடுக்கின்றனர். 
    இதை ஏராளமான தொழிலாளர்கள் குடிசை தொழிலாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தோல், விதை நீக்கப்பட்ட புளியை பாலித்தீன் பைகளில் அடைத்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். 

    இதேபோல் விதை நீக்கப்படாத புளியை விவசாயிகள் நேரடியாக வெளியூருக்கு கொண்டு சென்று விற்கின்றனர். நத்தம் பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புளிக்கு கிராக்கி உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் புளி பறிப்பு சீசன் தீவிரம் அடையும். அப்போது புளி விலை குறையும் என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×