search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சென்னையில் மீண்டும் அதிகரிப்பு- 1277 தெருக்களில் வேகமாக பரவிய கொரோனா

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ‘மாலை மலர்’ நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 39 ஆயிரம் தெருக்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,277 தெருக்களில் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்

    10 நாட்களில் மட்டும் 1,517 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 20 தெருக்களில் அதிகபட்சமாக தலா 3 பேர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 தெருக்களில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    1,600 தெருக்களில் தலா ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாகவும், வெளி இடங்களுக்கு சென்று வந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    திருமணம், இறப்பு, சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் முககவசம் அணிவது இல்லை.

    இதுபோன்று அலட்சியமாக செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்படும் தெருக்களில் எச்சரிக்கை செய்யும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற நினைக்கவேண்டாம். உடனே ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.

    அம்பத்தூர், அத்திப்பட்டில் 4 ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதுதவிர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தால், உடனடியாக அங்கு சென்று சிகிச்சை பெறவேண்டும்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறோம். விமான நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×