search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    நெல்லை அரசு மருத்துவமனையில் 48 நாட்களில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற 2 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கும், அதனை தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும், 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

    நெல்லையில் அரசு மருத்துமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசியும், பல்நோக்கு மருத்துவ மனையில் கோவிஷீல்ட் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

    முதலில் விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தடுப்பூசி போட அச்சமடைந்தனர். தற்போது அரசு சார்பில் போதிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தினமும் சராசரியாக அரசு மருத்துவமனையில் 120 பேர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஜனவரி மாதம் 16-ந் தேதி முதற்கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நேற்று வரையான 48 நாட்களில் 4 ஆயிரம் பேர் நெல்லை அரசு மருத்துமனையில் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் அதிகமானோர் கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுள்ளனர். அந்த வகையில் சுமார் 3 ஆயிரம் பேர் கோவிஷீல்டும், ஆயிரம் பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். இன்றும் அரசியல் கட்சியினர் மற்றும் போலீசார் தடுப்பூசி போட்டனர்.

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. மேலும் உணவு கட்டுப்பாடுகளும் கடைபிடிக்க வேண்டிய தேவை கிடையாது.

    எனவே அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என பல்நோக்கு மருத்துவமனை மண்டல மருத்துவ அதிகாரி ‌ஷர்மிளா கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×