search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 64-ஆக உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாள் ஒன்றின் பாதிப்பு 10 முதல் 15-ஆக இருந்து வந்தது. தற்போது இது உயர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 414-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 64-ஆக உள்ளது. 126 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், 224 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
    Next Story
    ×