search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அருகே வெடி மருந்து கிடங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    தூத்துக்குடி அருகே வெடி மருந்து கிடங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    தூத்துக்குடி அருகே வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

    தூத்துக்குடி அருகே வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    தூத்துக்குடி:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் 7 பேர், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 4 பேர் மற்றும் மணல் திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஒருவர் உள்பட 35 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரம், கீழத்தட்டப்பாறை மற்றும் மேலத்தட்டப்பாறை ஆகிய பகுதிகளில் கல்குவாரி, கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

    வெடி மருந்து கிடங்கில் பராமரித்து வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். வெடி மருந்து பொருட்கள் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வருவாய்த்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, உரிய சான்றோடு வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வெடிமருந்து விற்பனை கிடங்கின் பணியாளர்கள் சென்று, அவர்களுக்கு கல்குவாரிகள் மற்றும் கிணறுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வெடிக்க வைக்க வேண்டும். மீதம் உள்ள வெடி பொருட்களை மீண்டும் அவர்களிடம் இருந்து, திரும்ப பெற்று பாதுகாப்பான முறையில் கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும். தெரியாதவர்களுக்கோ, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கோ விற்பனை செய்யக்கூடாது. எவ்வித ஆபத்தும் நேராத அளவுக்கு வெடி மருந்து பொருட்களை கையாண்டு, வெடிமருந்து கிடங்குகளை பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி ஊரக தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜ், தட்டப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் உடன் சென்றனர்.

    Next Story
    ×