search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் விஜயகாந்துக்கு உடல் பரிசோதனை

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை 11 மணியளவில் மனைவி பிரேமலதாவுடன் விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.

    இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவே அவர் செல்வதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இருப்பது பின்னர் தெரியவந்தது.

    ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×