search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே மீட்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தின் பாகங்கள்.
    X
    பெருந்துறை அருகே மீட்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தின் பாகங்கள்.

    திருப்பூர் வங்கியில் ஏ.டி.எம்.எந்திரம் கொள்ளை- வடமாநில கொள்ளையர்கள் 6 பேர் சிக்கினர்

    திருப்பூர் வங்கியில் ஏ.டி.எம்.எந்திரம் கொள்ளை போன சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் 6 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே, கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் பரோடா வங்கி செயல்படுகிறது. அதே வளாகத்தில், ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, காரின் பின் பகுதியில் கயிறு கட்டி, மறுமுனையை ஏ.டி.எம்., எந்திரத்துடன் இணைத்த கொள்ளையர், காரை இயக்கி, பெயர்த்தெடுத்து தப்பினர். எந்திரத்தில் ஒரு லட்சம் ரூபாய் இருந்தது.

    இவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார், ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் அருகே கண்டறியப்பட்டது. கொள்ளையரை பிடிக்க, காங்கயம் டி.எஸ்.பி., தனராசு தலைமையில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பெருந்துறை, விஜய மங்கலம், ஈங்கூர் பகுதிகளில் ஏ.டி.எம்., எந்திரத்தை கொள்ளையர் போட்டுவிட்டு சென்று இருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து டிரோன் வாயிலாக தேடினர்.

    பெருந்துறை அருகே சரளை, ஏரி கருப்பராயன் கோவில் பின்புறம், வெள்ளியம்பாளையம் ரோட்டில், தனியாருக்கு சொந்தமான புதிய கட்டிட பணி நடந்து வருகிறது. அங்கு, ஏ.டி.எம்., எந்திரம் உடைந்த நிலையில் கிடந்தது.

    பொதுமக்கள் அளித்த தகவலின்படி, தனிப்படை போலீசார் அங்கு சென்று எந்திரத்தை கைப்பற்றினர். அப்போது எந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையர் எடுத்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் பெருந்துறை பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 6 வடமாநில வாலிபர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த ஒரு கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை திருப்பூர் அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இவர்கள்தான் திருப்பூர் வங்கியில் ஏ.டி.எம் எந்திரத்தை கொள்ளையடித்தனரா?, கண்டெய்னர் லாரியுடன் பெருந்துறையில் தங்கியிருக்க காரணம் என்ன?, கொள்ளையடிக்கும் நோக்கில் கண்டெய்னர் லாரியில் சுற்றி திரிந்தனரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.67 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் திருப்பூர் வங்கி ஏ.டி.எம்.எந்திரத்தில் உள்ள பணம் என்பதும் அவர்கள்தான் வங்கி ஏ.டி.எம். எந்திரம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் முன்னுக்குபின் முரணாக பேசி வருவதால் அவர்களிடம் உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×