search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் பறிமுதல்
    X
    பணம் பறிமுதல்

    சேலத்தில் வாகன சோதனையில் வியாபாரி கொண்டு வந்த ரூ.1.75 லட்சம் பறிமுதல்

    சேலத்தில் வாகன சோதனையில் வியாபாரி கொண்டு வந்த ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தின் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி மாவட்டத்தில் 11 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினரும் களம் இறங்கியுள்ளனர். சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரி பிரபாகரன் தலைமையில் வாகன தணிக்கை நடந்தது.

    அப்போது உரிய ஆவணங்கள் இன்றி பனங்காடு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் எடுத்து வந்த 4.85 கிலோ வெள்ளிக் கொலுசு கம்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 950 என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த அந்த பொருட்கள் அனைத்தும் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது

    சேலம் கருப்பூர் அரபிக் கல்லூரி அருகே நேற்று இரவு பறக்கும் படை அதிகாரி முரளி தலைமையில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்தனர்.

    இதில் சேலம் மாமாங்கம் பகுதியை சேர்ந்த பைப்பு வியாபாரி ராமன் (வயது 45). இவர் 1 லட்சத்து 75 ஆயிரத்து 560 ரூபாயை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தார். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து பணத்தை பெற்று செல்லலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

    Next Story
    ×