search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தது ரூ.1 லட்சம்

    திருப்பூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.1 லட்சத்து 100 இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரத்தை முகமூடி கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்து காரில் கடத்திச்சென்றார்கள். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் கொள்ளையடித்து சென்ற ஏ.டி.எம். எந்திரம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் அருகே வெள்ளியம்பாளையம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலையோரம் கிடப்பதாக பெருந்துறை போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடைந்த நிலையில் கிடந்த ஏ.டி.எம். எந்திரத்தை கைப்பற்றினார்கள். ஊத்துக்குளி போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளை போன ஏ.டி.எம். எந்திரம் அது இருந்த இடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு 20 கிலோ மீட்டர் தொலைவில் உடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு இருக்கிறது. கொள்ளையர்கள் காரில் எடுத்துச்சென்று எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு நெடுஞ்சாலையோரம் வீசி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.1 லட்சத்து 100 இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×