search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் நேற்று ஏற்பட்ட கடும் பனி பொழிவால் பெரிய கோவிலின் கோபுரம் தெரியாதபடி பனி சூழ்ந்திருந்த காட்சி.
    X
    தஞ்சையில் நேற்று ஏற்பட்ட கடும் பனி பொழிவால் பெரிய கோவிலின் கோபுரம் தெரியாதபடி பனி சூழ்ந்திருந்த காட்சி.

    தஞ்சையில் கடும் பனிப்பொழிவு- வாகன ஓட்டிகள் அவதி

    தஞ்சையில் நேற்று காலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு காணப்பட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
    தஞ்சாவூர்:

    வடகிழக்குப்பருவமழை முடிவடைந்த நாள் முதல் பனிப்பொழிவும் அதிகமாக காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் பருவம் தவறி மழை பெய்த போதும் பனியின் தாக்கம் காணப்பட்டது. வழக்கமாக கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்கள் வரை கடும் குளிர் இருக்கும். இதனால் இதனை குளிர்காலம் என்பர்.

    ஆனால் இந்த ஆண்டு மாசி மாத தொடக்கத்தில் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு சற்று அதிகமாக காணப்பட்டது. இதனால் குளிரின் தாக்கமும் அதிகமாக நிலவி வந்தது.

    இந்த நிலையில் நேற்று கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடித்தது. தஞ்சை பெரியகோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டது. இதே போல் தஞ்சையில் உள்ள மேம்பாலங்களும், மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம் கோபுரம் உள்ளிட்டவை தெரியாத அளவிற்கு பனியால் மறைந்து காணப்பட்டது. பனியானது வெண்மேகங்கள் போன்று காணப்பட்டன. இது பொதுமக்களுக்கு ஊட்டி, கொடைக்கானலில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்கை எறிய விட்டபடி அவர்கள் சென்றனர். இருப்பினும் எதிரே வந்த வாகனங்கள், முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாததால் மெதுவாகவே சென்றன. விளை நிலங்கள், புல்களில் அதிகமாக பனிப்பொழிவு காணப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டன. பஸ்களும் காலை நேரத்தில் விளக்கை எறியவிட்டபடி சென்று வந்தன. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களும் இந்த பனிபொழிவு காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்கள் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை அணிந்து செல்வதை காண முடிந்தது. காலை 8 மணிக்குப்பிறகு வெயில் அடிக்கத்தொடங்கிய பின்னரே பனி விலகத்தொடங்கியது.
    Next Story
    ×