search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு தடுப்பூசி செலுத்திய காட்சி
    X
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு தடுப்பூசி செலுத்திய காட்சி

    சென்னை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட துணை ஜனாதிபதி

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
    சென்னை:

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதுவரை 1 கோடியே 43 லட்சம் பேர் ஊசி போட்டுள்ள நிலையில், அடுத்து 2-வது கட்டமாக 60 வயதை கடந்தவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை முதல் ஆளாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த நர்சு நிவேதா ஊசி போட்டார். அவருக்கு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசி போடப்பட்டது. 

    இதேபோல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

    தடுப்பூசி போட்டுக்கொண்ட நவீன் பட்நாயக்

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தகுதி உள்ள அனைவரும் முன்வந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா இல்லாத ஒடிசாவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
    Next Story
    ×