search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேம்பால பணிகள் நடைபெற்று வரும் காட்சி.
    X
    மேம்பால பணிகள் நடைபெற்று வரும் காட்சி.

    இறுதிக்கட்டத்தில் மேம்பால பணிகள்: கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்

    சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மேம்பால பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
    போரூர்:

    சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் 100 அடி சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

    பஸ் நிலையம் எதிரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

    பஸ் நிலையம் முன்பு பாலம் இறங்கும் இடத்தில் பணிகள் நிறைவடைந்து உள்ளன. தே.மு.தி.க. அலுவலகம் எதிரில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதையடுத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வழியாக 100 அடி சாலையை நோக்கி வரும் வாகனங்கள் மாற்று பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    போலீஸ் நிலையம் அருகில் மெட்ரோ ரெயில்வே பாலத்துக்கு கீழே சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடையும் வகையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

    கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டும் விருகம்பாக்கம் பகுதியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் 100 அடி சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    நெரிசல் அதிகமாகும நேரங்களில் இருசக்கர வாகனங்களையும் போலீசார் அனுமதிப்பது இல்லை.
    Next Story
    ×