search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின்
    X
    கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின்

    கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு

    சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட மு.க.ஸ்டாலின் இன்று விருப்பமனு தாக்கல் செய்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. விருப்பமனுவை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

    இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட மு.க.ஸ்டாலின் இன்று விருப்பமனு தாக்கல் செய்தார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விருப்பமனுவை மு.க.ஸ்டாலின் அளித்தார்.

    1994-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் 9-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

    2011 மற்றும் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மு.க.ஸ்டாலின் 3-வது முறையாக அத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
    Next Story
    ×