search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறை
    X
    வருமான வரித்துறை

    டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி கருப்பு பணம்- வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு

    தனியார் டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் 220 ரூபாய் கருப்பு பணம் கண்டறியப்பட்டது.
    சென்னை:

    சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினர். 

    தமிழகம், குஜராத் மற்றும் கொல்கத்தாவில் உள்ள 20 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை மற்றும் விசாரணை குறித்த விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று இரவு வெளியிட்டது.

    அதில், டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதுவரை கணக்கில் வராத ரூ.220 கோடி பணம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சோதனையின்போது ரூ.8.30 கோடி ரொக்கம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

    நேற்று நள்ளிரவைத் தாண்டியும் பல இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனை முடிந்தபிறகே கைப்பற்றப்பட்ட மொத்த பணம், வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தொடர்பான ஆவணங்கள் குறித்த முழு விவரங்களும் தெரியவரும். 
    Next Story
    ×