search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    தண்டவாள பராமரிப்பு பணி- தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

    திருச்சி மற்றும் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில் நடந்து வரும் பராமரிப்பு பணிக்காக தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட திருச்சி மற்றும் சென்னை கோட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பாதைகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்க உள்ளது. அத்துடன், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, காரைக்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.02605/02606), மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (02635/02636) ஆகிய ரெயில்கள் மார்ச் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும்.

    கன்னியாகுமரி-சென்னை எக்ஸ்பிரஸ் (02634) மார்ச் மாதம் 19-ந் தேதி செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். நெல்லை-சென்னை எக்ஸ்பிரஸ் (02632) மார்ச் மாதம் 19 மற்றும் 20-ந் தேதிகளில் மட்டும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.

    ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் (02206) வருகிற மார்ச் மாதம் 19-ந் தேதி மட்டும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும். மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (02638) மார்ச் 20-ந் தேதி மட்டும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும். குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் (06128) மார்ச் மாதம் 19-ந் தேதி மற்றும் 21-ந் தேதிகளில் விழுப்புரம் வரை இயக்கப்படும்.

    முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (02693), அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (06723) ஆகிய ரெயில்கள் மார்ச் மாதம் 20-ந் தேதி மட்டும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும். சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.02661) மார்ச் மாதம் 20 மற்றும் 21-ந் தேதிகளில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும். சென்னை-திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (06105), சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (06851) ஆகிய ரெயில்கள் மார்ச் 21-ந் தேதி மட்டும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.

    அதன்படி, சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06127) இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி வரை விழுப்புரத்தில் இருந்து மாயவரம், தஞ்சாவூர், திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    புவனேசுவரத்தில் இருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (08496) மார்ச் 19-ந் தேதி பெரம்பூர், அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
    Next Story
    ×