search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவினாசிக்குள் லாரிகள் நுழைய தடை

    திருப்பூர் மாவட்டம் அவினாசி நகரில் குழாய் பதிப்பு பணிகள் நடப்பதால் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அவினாசி:

    கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை இடையே திருப்பூர் மாவட்டம் அவினாசி உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை முக்கிய நகரங்களை இணைக்கும் ரோடு என்பதால் 24 மணிநேரமும் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும். செங்கப்பள்ளி-வாளையார் பைபாஸ் ரோடு அமைக்கப் பட்ட போது அவினாசியின் தெற்கு பகுதியில் பைபாஸ் ரோடு கடந்து சென்றதால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது.

    தற்போது நகரில் குழாய் பதிப்பு பணிகள் நடப்பதால் ரோடு பாதியளவு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் வழக்கம் போல் வாகன நெரிசலும் நெருக்கடியும் தவிர்க்க முடியாததாகி விட்டது. மேட்டுப்பாளையம், அன்னூர் வழியாக வரும் லாரிகள் அனைத்தும் அவிநாசிக்குள் நுழைந்து ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றன.

    அதிக எண்ணிக்கையில் இவ்வழியாக லாரிகள் வருகின்றன.

    இவை ஆட்டையாம்பாளையத்திலிருந்து அவிநாசிக்குள் நுழையாமல் நேரடியாக மேற்கு நோக்கி சென்று பைபாஸ் ரோடு சேரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவிநாசிக்குள் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு சிறிது தீர்வு ஏற்படும். இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஆட்டையாம்பாளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×