search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    சென்னையில் 64 தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு

    சென்னையில் 16 அரசு மருத்துவமனைகளிலும் 64 தனியார் மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    அவர்கள் கோவின் செயலியில் முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள். முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

    இந்தநிலையில் அடுத்த கட்டமாக வருகிற 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இந்தநிலையில் தமிழகத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட ஆர்வமாக இருப்பதை தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

    சென்னையில் 16 அரசு மருத்துவமனைகளிலும் 64 தனியார் மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் தடுப்பூசி போட முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. நேரடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னையில் 200 வார்டுகளில் உள்ள 80 லட்சம் பொதுமக்களுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும்.

    பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முன்நின்று ஏற்பாடு செய்வார்கள்’ என்றார்.
    Next Story
    ×