search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக- காங்கிரஸ்
    X
    திமுக- காங்கிரஸ்

    காங்கிரஸ் தொகுதி பங்கீடு- தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    சென்னை:

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்குவதற்காக கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியை சிறப்பு தூதுவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. இதற்காக அவர் நேற்று சென்னை வந்தார்.

    நேற்று மாலை சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. உம்மன்சாண்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க.வுடன் நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் கேட்க வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. அதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட செயல் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இன்று காலை 10 மணி அளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக உம்மன்சாண்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டவர்கள் அண்ணா அறிவாலயம் சென்றனர்.

    தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட குழுவினர் வந்திருந்தனர்.

    பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் எத்தனை தொகுதி எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. தரப்பில் பேசிய குழுவினர் கூட்டணி கட்சிகளை கருத்தில் கொண்டு தகுந்த முடிவு எடுக்கப்படும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவு எடுத்து அறிவிப்பார் என்றனர்.
    Next Story
    ×