search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாஜன்
    X
    ஷாஜன்

    செண்பகராமன்புதூர் அருகே விஷம் வைத்து கோழிகளை கொன்றவர் சிறையில் அடைப்பு

    செண்பகராமன்புதூர் அருகே விஷம் வைத்து கோழிகளை கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஆரல்வாய்மொழி:

    துவரங்காடு அருகே காஞ்சிரங்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவரும், ராஜன் என்பவரும் சேர்ந்து செண்பகராமன்புதூர் அருகே அவ்வையாரம்மன் கோவில் பின்புற கால்வாய் கரையோரம் கோழிப்பண்ணையை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்விரோத தகராறில், சுரேஷை பழிவாங்க கோழிப்பண்ணையில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை மத்தியாஸ் நகரை சேர்ந்த ஷாஜன் என்பவர் கொன்று விட்டு தலைமறைவானது தெரிய வந்தது. கோழிகள் அங்கு கொத்து, கொத்தாக இறந்து கிடந்தன.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் ஷாஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதற்காக சப்-இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் பிடித்து குமரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் கோழிகளை கொன்றது ஏன்? என்பது குறித்து போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கோழிப்பண்ணையை ஷாஜன் நடத்திய போது, தீவனங்கள் திருட்டு போய் உள்ளது. இதனால் கோழிப்பண்ணை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை கோழிப்பண்ணை நிறுவனம் ரத்து செய்து விட்டது. இதற்கு சுரேஷ் தான் காரணம் என நினைத்து அவரை பழிவாங்குவதற்காக 6 ஆயிரம் கோழிகளை கொன்று குவித்ததாக ஷாஜன் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×