search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆமை
    X
    ஆமை

    சின்னத்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத ஆமை- மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்

    ராட்சத ஆமை கரை ஒதுங்கிய தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆமையை பார்க்க அங்கு திரண்டனர்.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவ கிராமத்தில் இன்று காலை சுமார் 200 கிலோ எடைகொண்ட ராட்சத ஆமை ஒன்று கரை ஒதுங்கியது.

    இந்த ஆமை கடலில் இருந்து அதிக தூரம் கடந்து கரை பகுதிக்கு வந்துவிட்டது. இதனால் அந்த ஆமையால் திரும்பவும் கடலுக்குள் செல்ல முடியவில்லை. அது மணலில் புதைந்த நிலையில் தத்தளித்து கொண்டிருந்தது.

    ராட்சத ஆமை கரை ஒதுங்கிய தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆமையை பார்க்க அங்கு திரண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த நித்திரவிளை போலீஸ் ஏட்டு ஜோஸ் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மீனவர்கள் உதவியுடன் ஆமையை கடலுக்குள் மீண்டும்அனுப்பும் முயற்சியும் நடந்தது. தொடர்ந்து பலமணி நேர போராட்டத்திற்கு பின் ஆமை பாதுகாப்பாக ஆழ்கடலுக்குள் விடப்பட்டது.

    Next Story
    ×