search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிளி மீன்கள்
    X
    கிளி மீன்கள்

    திருப்பூருக்கு கிளி மீன்கள் விற்பனைக்கு வருகை

    திருப்பூர் மார்க்கெட்டிற்கு நேற்று ஒரு மாதத்திற்கு பிறகு கிளி மீன்கள் விற்பனைக்காககொண்டு வரப்பட்டிருந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மீன் வகைகளை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த மார்க்கெட் வழக்கத்தை விட கூட்டமாக இருக்கும். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை மற்றும் பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு விடுமுறை என்பதால் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று காலை முதலே மீன் மார்க்கெட்டிற்கு ஏராளமானவர்கள் வந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். மீன், இறால், நண்டு என ஏராளமானவைவிற்பனை செய்யப்பட்டன. இதற்கிடையே மார்க்கெட்டிற்கு நேற்று ஒரு மாதத்திற்கு பிறகு கிளி மீன்கள் விற்பனைக்காககொண்டு வரப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-

    தென்னம்பாளையம் சந்தைக்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கிளி மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. தற்போதுதான் கிளி மீன்கள் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு நேற்று முதல் இந்த மீன்கள் வந்துள்ளது.

    இந்த மீன் ஒன்று ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு மீன் சுமார் 4 முதல் 5 கிலோ வரை எடையுடன் இருந்தது. தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் மீன்களின் வரத்து இனிமேல் குறைய தொடங்கும். இதுபோல் திருவிழா சீசன்களும் வருவதால் மீன் விற்பனையும் மந்தமாக தான் இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×