
மதுரை பெத்தானியாபுரம் லேசர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 59). இவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இவரது மகன், மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மணிமாறன் மனைவியுடன் பெத்தானியாபுரம் வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.
அவர் மனைவியுடன் கடந்த 17-ந்தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான அலங்காநல்லூர் மேலச்சின்னனம்பட்டிக்கு சென்றிருந்தார்.
அப்போது யாரோ மர்மநபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.6480 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் மணிமாறன் 18-ந்தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.6480 ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக மணிமாறன் கரிமேடு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.