search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    ஒப்புகைச் சீட்டையும் எண்ண வேண்டும் என்ற வழக்கு முடித்து வைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

    மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணக் கோரியதை, சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, வாக்காளர்கள் எந்த சின்னத்துக்கு வாக்களித்தனர் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் விவிபிஏடி எனும் ஓட்டுக்கு ஒப்புகைச்சீட்டு காட்டும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் பொருத்தப்பட்டன. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஓட்டு ஒப்புகைச் சீட்டுக்களை முழுமையாக எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பாக்கியராஜ் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

    அதில், நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருந்தன. அதனால், சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தையும் எண்ண உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
    Next Story
    ×