search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    43 ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தடுப்பூசி

    ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 43 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடப்பட்டது.
    சென்னை:

    கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த மாதத்தில் இருந்து முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர் என படிப்படியாக ஒவ்வொரு துறையை சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அந்தவகையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு போடப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த நிகழ்வினை, சென்னை ரெயில்வே கோட்ட மூத்த பாதுகாப்பு படை கமிஷனர் செந்தில் குமரேசன் தொடங்கி வைத்தார்.

    சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 4 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் என 43 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கும், அந்தந்த பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சென்னை ரெயில்வே கோட்ட மூத்த பாதுகாப்பு படை கமிஷனர் செந்தில் குமரேசன் தெரிவித்தார்.
    Next Story
    ×