
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள முருங்கபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து சாமி( வயது78). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துசாமி இன்று அதிகாலை 5 மணிக்கு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார். அக்கம்-பக்கத்தினர்ஓடிவந்து தீயை அணைத்தனர். அதற்குள் முத்துசாமி சம்பவ இடத்திலேயே கருகி பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்குளித்து இறந்த முத்துசாமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.