
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மே 3-ந்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் செயலாகும்.
பொதுத்தேர்வுக்கு இடையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இரண்டு வாரங்கள் கல்விப் பணி பாதிக்கும். இடையில் சனி, ஞாயிறு போன்ற அரசு விடுமுறை நாட்களும் வரும். மேலும் இதுவரை மாணவர்களுக்கு மாநில வினாத்தாள் மற்றும் வினா வங்கி எதுவும் அரசால் வழங்கப்படவில்லை.
ஆகவே, மாணவர்கள் பொதுத்தேர்வுக்குத் தயாராவதற்கு குறைந்த பட்சம் 4 மாதங்களாவது அவகாசம் வழங்கி சுலபமான வழிகளில், குறைந்தபட்ச வினாக்களுடன் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத வண்ணம் பொதுத் தேர்வை ஜூன், ஜூலை மாதங்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்து அறிவிக்கப்பட உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும், மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுத்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.