
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக கரூர் லைட் அவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தி சிலை சிதிலமடைந்த காரணத்தால் புதியதாக சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த காந்தி சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணியை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்துள்ளனர். அடக்கு முறையை கையாண்டு காட்டுமிராண்டிதனமாக நடந்து கொண்ட காவல் துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். காந்தியடிகளின் சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.