
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் ஆமை ஒன்று முட்டை இட்டுச்சென்றதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து கம்பிப்பாடுக்கும் அரிச்சல்முனைக்கும் இடைப்பட்ட கடற்கரைப்பகுதியில் 100 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.
சேகரிக்கப்பட்ட அந்த ஆமை முட்டைகள் எம்.ஆர்.சத்திரம் கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள முட்டை பாதுகாப்பகத்தில் குஞ்சு பொரிப்பதற்காக கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டது.
கடந்த 2 மாதத்தில் இதுவரையிலும் 5,500-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.