search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.டி.ரவி
    X
    சி.டி.ரவி

    பாஜக எம்எல்ஏக்கள், தமிழக சட்டசபைக்குள் செல்வார்கள்- சி.டி.ரவி பேட்டி

    நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலக்க எண்ணிக்கையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் செல்வார்கள் என்று பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறினார்.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பார்வையாளருமான சி.டி. ரவி கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க.விற்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலக்க எண்ணிக்கையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் செல்வார்கள். தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிக்காக ரூ.6 லட்சத்து 10 கோடியை பிரதமர் மோடி அளித்துள்ளார்.

    முத்ரா லோன் திட்டம், விவசாயிகளுக்கு கிசான் திட்டம், எரிவாயு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் தமிழக மக்கள் பயன் அடைந்துள்ளனர். பிரதமர் மோடி மட்டும் தான் தமிழக மக்களின் நண்பன். தமிழ்நாட்டின் கலாசார விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதற்கு எதிராக இருந்தவர்கள் காங்கிரசும், தி.மு.க.வும்தான்.

    ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. ஆகையால் தமிழக மக்களுக்கு பா.ஜ.க. தான் நண்பன். காங்கிரஸ், தி.மு.க. எதிர்க்கட்சிகள். தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள். தங்களின் வாக்குகளை தேசிய ஜனநாயக முன்னணிக்கு அளியுங்கள். பா.ஜ.க.தான் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் காக்கின்ற கட்சி.

    இந்து கடவுள்களை எதிர்ப்பவர்களுக்கு தமிழக மக்கள் பாடம் கற்பிக்க இதுதான் சரியான நேரம். அவர்களுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது குறித்து தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் முதன்மையானது. 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க. துணைநிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×