search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்
    X
    நெல்

    தஞ்சையில் இதுவரை 3¾ லட்சம் டன் நெல் கொள்முதல்

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 3¾ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 88 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.726 கோடி வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய இதுவரை 457 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தினால் சாலையோரம் நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நேற்று வரை 3 லட்சத்து 74 ஆயிரத்து 218 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை வட்டாரத்தில் 43 ஆயிரத்து 469 டன்னும், திருவையாறு வட்டாரத்தில் 22 ஆயிரத்து 822 டன்னும், பூதலூர் வட்டாரத்தில் 24 ஆயிரத்து 965 டன்னும், ஒரத்தநாடு வட்டாரத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 498 டன்னும், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 30 ஆயிரத்து 715 டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    பேராவூரணி வட்டாரத்தில் 9 ஆயிரத்து 268 டன்னும், கும்பகோணம் வட்டாரத்தில் 20 ஆயிரத்து 44 டன்னும், திருவிடைமருதூர் வட்டாரத்தில் 25 ஆயிரத்து 364 டன்னும், பாபநாசம் வட்டாரத்தில் 54 ஆயிரத்து 73 டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கூறும்போது, தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இதுவரை 88 ஆயிரத்து 851 விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்காக ரூ.726 கோடி வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×