search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    ஓ.பி.எஸ். தேர்தலுக்காக ஊர் ஊராக சென்று நலத்திட்டங்கள் வழங்குகிறார் - கம்பத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

    தொகுதியில் இதுவரை எட்டி பார்க்காத ஓ.பி.எஸ். தேர்தலுக்காக ஊர் ஊராக சென்று நலத்திட்டங்கள் வழங்குகிறார் என்று கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    உத்தமபாளையம்:

    உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தமபாளையம் வந்த மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்தமபாளையத்தில் தி.மு.க. சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் மக்கள் குறை கேட்கும் கூட்டம் இன்று காலை நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கம்பம் தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இதற்காக கோகிலாபுரம் விலக்கு என்ற இடத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது பொதுமக்கள் அமர்வதற்காக 30 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. மேடைக்கு வரும் வழியில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

    அதன்பிறகு பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர். அதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை தனது சொந்த தொகுதியான போடியில்கூட எட்டி பார்க்கவில்லை. தனது மகனுக்கு பதவி வாங்குதற்காக டெல்லி வரை சென்றார். ஆனால் தனக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் மலை கிராமங்களுக்கு கூட நடந்து சென்று குறைகள் கேட்டு வருகிறார். ஆண்டிபட்டியில் 7500-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் இவர்களின் பிரச்சினை இன்னும் தீராத நிலையில் உள்ளது. இது குறித்து அந்த துறை சார்ந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கேட்டபோது மக்களின் துயரங்கள் குறித்து கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பதில் அளித்தார். இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    தனது சொந்த மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அலையே வீசி வருகிறது. ஜெயலலிதாவுக்காக தர்ம யுத்தம் நடத்தியவர் தற்போது அதுபற்றி எதுவும் பேசாமல் பதவிக்காக மட்டுமே உள்ளார். பழைய கட்டிடத்திற்கு பெயிண்ட் அடித்து அதனை புதிய திட்டம்போல அடிக்கல் நாட்டி திறப்பு விழா நடத்துகின்றனர்.

    தனக்கு எதிராக அலை வீசுவதை அறிந்து கொண்டுதான் ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஊர் முழுக்க சுற்றி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தவும், போடி அகல ரெயில் பாதை திட்டத்தை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    Next Story
    ×