search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டூர் அருகே செருகளத்தூரில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    கோட்டூர் அருகே செருகளத்தூரில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    கோட்டூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்

    கோட்டூர் அருகே செருகளத்தூரில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோட்டூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே செருகளத்தூர் கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செருகளத்தூரில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து விட்டது.

    இதனால் குழாய்கள் மூலம் நேரடியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தேவையான குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் செருகளத்தூரில் உள்ள குமரன் ெதருவில் குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக கைபம்பு மூலம் தான் குடிநீர் மற்றும் பல்வேறு தேவைக்காக குடிநீர் ெபற்று வந்தனர்.

    பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இதை ெதாடர்ந்து நேற்று கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கக்கோரி அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து குமரன் ெதரு பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறாம். இதுவரை கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தப்படவில்லை. இதனால் எங்கள் பகுதியில் இதுவரை குடிநீர் குழாய் அமைக்கவில்லை. கைபம்பு மூலம் தான் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். மேலும் பல்வேறு பயன்பாட்டிற்கும் இந்த கைபம்பு மூலம் தான் தண்ணீர் பெற்று வருகின்றோம்.

    தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டால் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் கைபம்பில் போதுமான தண்ணீர் வருவதில்லை. 2 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம்.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே செருகளத்தூர் கிராமத்தில் புதியமேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காலிக்குடங்களுடன் சாலை ஈடுபட்ேடாம். ஊராட்சி மன்ற தலைவர் நாகரெத்தினம் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை கைவிடுகிறோம்.

    எனவே எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். இல்லை என்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×