search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்ன வெங்காயம்
    X
    சின்ன வெங்காயம்

    காரிமங்கலம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

    காரிமங்கலம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.
    காரிமங்கலம்:

    தா்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த வாரம் 1 கிலோ வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.60-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து வெங்காயத்தின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் வாரச்சந்தையில் காய்கறி விலையும் உயர்ந்துள்ளது.
    Next Story
    ×